இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்துள்ளது.
போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி போட்டியின் 5 ஆவது நாளான இன்று 308 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
166 பந்துகளில் 15 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 59 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் சஹீன் அப்ரிடி மற்றும் நஷிம் அபாஸ் சஹா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 2 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் அணி சார்ப்பில் ஆபித் அலி ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களையும் பாபர் அசாம் ஆட்டமிக்காமல் 102 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
அதனடிப்படையில் 5 ஆவது நிறைவில் போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்துள்ளது.
இந்த போட்டி ராவல்பிண்டி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வந்த நிலையில், போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.