கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயது பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் ஆரம்ப கட்ட போட்டிகளில் வெற்றிகளை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி .
இன்று கொழும்பில் உள்ள இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குருநாகல் மாவட்டத்தை சேர்ந்த பராக்கிரமபாகு மத்திய மகா வித்தியாலயத்தை எதிர்கொண்டது தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி .
இரு அணிகளுக்குமிடையில் மிகுந்த போட்டி நிலவியது ஆனாலும் போட்டியின் ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற புள்ளி அடிப்படையில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் பெண்கள் அணி தேசிய ரீதியில் வெற்றியினை தமதாக்கியது.