தென்னாபிரிக்காவுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டித் தொடரில் இருந்து தினேஸ் சந்திமால் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, குறித்த போட்டித் தொடருக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த போட்டித் தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
திமுத் கருணாரத்ன - தலைவர், நிரோஷன் திக்வெல்ல - உப தலைவர், லஹிரு திரிமான்ன, கௌஷால் சில்வா, குசல் மென்டிஸ், குசல் ஜனித் பெரேரா, மிலிந்த
சிறிவர்தன, தனஞ்சய த சில்வா, ஒசந்த பெர்ணான்டோ, எஞ்சலோ பெரேரா, சுரங்க லக்மால் , கசுன் ராஜித , விஸ்வ பெர்ணான்டோ , சாமிக கருணாரத்ன , மொஹமட் சிராஸ், லக்ஷான் சதகொன், லசித எம்புல்தெனிய.