ஆண் கால்பந்தாட்ட வீரர்களுக்கு சமமான சம்பளத்தை வழங்குமாறு கோரி அமெரிக்க மகளிர் கால்பந்தாட்ட வீராங்கனைகள் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய கால்பந்தாட்ட அணியின் 28 வீராங்கனைகளால் கடந்த வருடம் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சமமான சம்பள சட்டத்தின் படி 66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த தீர்ப்பின் மூலம் தாம் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய உள்ளதாகவும் குறித்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.