web log free
December 27, 2024

ஆபாச பட நடிகையான கார் ரேஸ் வீராங்கனை!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கார் பந்தய வீராங்கனை ரினி கிரேசி. இவருக்கு 25 வயது ஆகிறது. ஏராளமான கார் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். கொரோனா ஊரடங்கினால் கார் பந்தயங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ரினி கிரேசிக்கு வருமானம் இல்லை.

இந்த நிலையில் அவருக்கு ஆபாச படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படங்களில் நடித்தால் அதிக பணம் தருவதாகவும் ஆசை காட்டினார்கள். முதலில் தயங்கிய ரினி கிரேசி பின்னர் ஒப்புக்கொண்டார். சில ஆபாச படங்களில் நடித்து முடித்துள்ளார். இதற்காக அவருக்கு நிறைய பணம் கிடைத்துள்ளது. இதையடுத்து ஆபாச பட நடிகையாக தொடரப்போவதாக அறிவித்து உள்ளார்.

கார் பந்தய விளையாட்டு வீராங்கனை ஆபாச பட நடிகையானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆபாச பட நடிகையானது குறித்து ரினி கிரேசி கூறும்போது, “ஆபாச படங்களில் நடிக்க நான் எடுத்த முடிவு சரியானது என்று உணர்கிறேன். இதில் நடிக்க ஆரம்பித்தபிறகு நிறைய சம்பாதிக்கிறேன். இந்த பணம் எனது வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. சில ஆண்டுகள் தொடர்ந்து ஆபாச படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். ஆபாச நடிப்பு தொழில் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் உள்ளது” என்றார்.

Last modified on Monday, 15 June 2020 02:34
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd