கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விம்பிள்டன் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல பிரெஞ்ச் ஓபனும் செப்டம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 31ம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 13ம் தேதிவரை நடத்தப்படும் என்று அமெரிக்க டென்னிஸ் கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தான் ஆவலுடன் காத்திருப்பதாக முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளும் செப்டம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி துவங்கி செப்டம்பர் 13ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக அமெரிக்க டென்னிஸ் கழகம் அறிவித்துள்ளது.
ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் இந்த போட்டிகள் நடத்தப்படும் என்றும் மிகுந்த பாதுகாப்புடன் போட்டிகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 15ம் திகதியே இந்த போட்டியில் பங்கேற்க அமெரிக்கா வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.