தேசிய விளையாட்டு சபையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சபையின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்களான முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்கக்கார, நீச்சல் வீரர் ஜுலியங் போலிங், மோட்டார் கார் வீரர் டிலந்த மாலகமுவ மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரும் அடங்குகின்றனர்