பார்சிலோனா அணியிலிருந்து மெஸ்ஸி வெளியேறுவதில் தனக்கு உடன்பாடில்லை என பார்சிலோனா கழகத்தின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் ரமோன் பிளேனஸ் (ramon planes) தெரிவித்துள்ளார்.
மேலும் பார்சிலோனா அணியை மெஸ்ஸியின் தலைமைத்துவத்துவத்தின் கீழ் வலுவான அணியாக மீண்டும் மாற்றுவதே பார்சிலோனா கால்பந்து கழகத்தின் விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல கால்பந்தாட்ட கழகமான பார்சிலோனாவின் நட்சத்திர வீரரான Lionel Messi தனது ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு நேற்று முன் தினம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதேவேளை, இந்த திடீர் அறிவிப்பு குறித்து கழக நிர்வாக குழுவுக்கும் மெஸ்ஸிக்கும் இடையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பார்சிலோனா கழகம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.