web log free
April 15, 2025

அரையிறுதியில் லக்கி ஸ்டார்

Maruthamunai Universe Sports Club hosts 'Rishad Bathiudeen Trophy Football Tournament - 2020' Maruthamunai Universe Sports Club hosts 'Rishad Bathiudeen Trophy Football Tournament - 2020'

மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய ‘ரிசாட் பதியுதீன் வெற்றிக் கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி- 2020’இன்  காலிறுதிப் போட்டி, மருதமுனை  -  மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் (30)   நடைபெற்றது. இச்சுற்றுப் போட்டியில், கல்முனை   லக்கி ஸ்டார்  கழகத்தை எதிர்த்து, மட்டக்களப்பு மாவட்ட   உதைபந்தாட்ட  ஜம்பவான் அணியான வை.எஸ்.எஸ்.சி ஏறாவூர்   விளையாட்டுக் கழகம் எதிர்த்துக் களமாடியது. 

இதில், லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகம் 05 : 02 என்ற கோல் அடிப்படையில் அபார வெற்றி பெற்று உதைபந்தாட்ட ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. 

இப்போட்டியில், லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக மாஜித் 03 கோல்கள், இர்பான் 01 கோல், ஆசிர் 01 கோல் என்ற அடிப்படையில், லக்கி ஸ்டார் விளையாட்டுக்  கழகத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டு, சுற்றுப் போட்டியின் அரையிறுதி போட்டிக்கு,  கல்முனை லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் தெரிவாகியது.

 

Last modified on Saturday, 05 September 2020 03:57
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd