மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் முழு சுயநினைவுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கட்சபையின் தலைவரும் முன்னாள் அணித் தலைவருமான கங்குலிக்கு சனிக்கிழமை காலை உடற்பயிற்சிக்குப் பின்னர் கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் உடனடியாக கொல்கத்தா வூட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் ஊடங்களிடம் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு இருதயத்தில் இரண்டு அடைப்புகள் உள்ளதாகவும் அது தொடர்பான சிகிச்சைகள் தொடர்பில் வரும் திங்களன்று தீர்மானிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மாரடைப்புக்குப் பின்னர் அவருக்கு இப்போது ஓய்வு தேவைப்படுவதாகவும், ஆபத்தான நிலை ஏதும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கார் இது குறித்து தனது டுவீட்டர் பக்கத்தில் பதிவொன்றையும் செய்துள்ளார்.