ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்க உள்ள பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும்.
கடந்த 1948 ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவு மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். அதற்கு அடுத்து 1960-ல் 23 நாடுகளில் இருந்து 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2012 லண்டன் பாராலிம்பிக்கில் 100 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் உடல் பாதிப்புக்கு ஏற்ப அவர்களுக்கான விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. அதைத் தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது.