முதல் முறையாக பாராலிம்பிக் போட்டியில் இலங்கை தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இலங்கையை சேர்ந்த தினேஸ் பிரியந்த ஹேரத் இம்முறை பாராலிம்பிகில் உலக வரலாற்றில் புதிய சாதனையை படைக்கும் விதமாக f46 ஆண்களுக்கான ஈட்டியெறிதலில் 67.79 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இது குறித்து பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் தினேஸ் பிரியந்தவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
#GoldMedal #DineshPriyantha #JavelinThrow #Tokyo2020ParalympicGames #Tokyo2020 #金メダル #東京パラリンピック #SriLanka #Japan