ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. ஐதராபாத் சன்ரைசர்ஸ் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்டனர். இந்த நிலையில் சார்ஜாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.