web log free
April 15, 2025

பொதுநலவாய பளு தூக்குதல் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம்

வியாழன் (09) நடைபெற்ற பொதுநலவாய பளு தூக்குதல் போட்டியில் இலங்கை அணி தங்கப் பதக்கத்தை வென்றது.

அதன்படி, உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 45 கிலோ எடைப் பிரிவில் ஸ்ரீமாலி சமரகோன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஸ்ரீமாலி சமரகோன் இதற்கு முன்னர் 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும் 2015 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார் மேலும் 2016 இளையோர் உலக சாம்பியன்ஷிப்பில் 14ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

Last modified on Thursday, 09 December 2021 14:56
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd