LPL 2021: மாபெரும் இறுதிப் போட்டிக்கு Galle Gladiators அணி தெரிவு
லங்கா பிறீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் மாபெரும் இறுதிப் போட்டிக்கு Galle Gladiators அணி தெரிவாகியுள்ளது.
Jaffna Kings அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற முதலாவது Qualifier போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் Galle Gladiators அணி இந்த வாய்ப்பை தனதாக்கியுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
Galle Gladiators அணி சார்பில் Kusal Mendis 85 ஓட்டங்களையும், Danushka Gunathilaka 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
189 எனும் வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 16 தசம் 5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
Jaffna Kings அணி சார்பில் Rahmanullah Gurbaz 59 ஓட்டங்களையும், Wanindu Hasaranga 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் Galle Gladiators அணி சார்பில் Nuwan Thushara 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டதுடன், சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியிருந்த Kusal Mendis ஆட்ட நாயகன் விருதை தனதாக்கிக் கொண்டார்.
இதற்கமைய Galle Gladiators அணி 64 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தெரிவாகியுள்ளது.
இதேவேளை, நேற்றைய Eliminator போட்டியில் வெற்றி பெற்ற Dambulla Giants மற்றும் முதலாவது Qualifier போட்டியில் தோல்வியடைந்த Jaffna Kings ஆகிய அணிகள் நாளைய தினம் இரண்டாவது Qualifier போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதற்கமைய நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணி எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாபெரும் இறுதிப் போட்டியில் Galle Gladiators அணியைச் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது