இரண்டாவது லங்கா பிறீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அதிக பட்சமாக அவிஷ்க பெர்ணான்டோ 63 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இதற்கமைய காலி அணி வெற்றி பெறுவதற்கு 202 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் இடம்பெற்ற முதலாவது லங்கா பிறீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில் Galle அணியை 53 ஓட்டங்களினால் வீழ்த்தி Jaffna அணி கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.