கோல் கிளேடியயேட்டர்ஸ் vs ஜப்னா கிங்ஸ்
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் கோல் கிளேடியயேட்டர்ஸ் அணியை 33 ஓட்டங்களால் வீழ்த்தி, ஜப்னா கிங்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஜப்னா கிங்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் கிளேடியயேட்டர்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.