web log free
April 01, 2026

கனடா மீதான சீனாவின் விமர்சனத்துடன் ஒலிம்பிக் தொடங்குகிறது

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளன.

சீனாவில் விரைவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. ஆனால், கொரோனா வைரசின் பிறப்பிடம் என சொல்லப்படும் சீனாவுக்கு மீண்டும் அந்த வைரசின் புதிய வகை திரிபுகள் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை துவக்கம் முதலே சீனா அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டிற்குள்ளும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட முதல் நபர் கனடா நாட்டில் இருந்து வந்த பார்சல் ஒன்றை பிரித்து பார்த்ததாகவும் அதன் மூலம் அவர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அந்த பார்சல் கனடாவில் இருந்து அமெரிக்கா, ஹாங்காங் வழியாக சீனாவுக்கு அனுப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் கனடாவில் இருந்து சீனாவிற்கு ஒமைக்ரான் நுழைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், வெளிநாடுகளில் இருந்து வரும் பார்சல்களை முழுமையாக கிருமிநாசினி தெளித்த பின்னரே கையாள வேண்டும் எனவும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பணியாளர்களை மட்டுமே இந்த பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் சீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பார்சல்களை பிரிக்கும் போது கட்டாயம் கையுறைகள், முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் எனவும் சீனா அறிவுறுத்தியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd