ஐ.பி.எல் மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் 1214 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயரை பதிவு செய்தனர்.
இதில் இறுதி பட்டியலில் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 228 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள். 355 வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடியவர்கள்.
இதில் 370 வீரர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள், 220 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வீரர்கள் பட்டியலில் 48 வீரர்களும், ஒன்றரை கோடி பட்டியலில் 20 வீரர்களும், ஒரு 1 கோடி பட்டியலில் 34 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஏலத்தின் முதல் பட்டியல் ஏலத்தில் முதல் வீரராக அஸ்வின் பெயர் தான் வர உள்ளது. இதனால் முதல் வீரராக அஸ்வினை பெற அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும். முதல் பட்டியலில் வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் பவுல்ட், பாட் கம்மின்ஸ் தென்னாப்பிரிக்க வீரர்கள் குயின் டி காக், டுபிளசிஸ் , ஸ்ரேயாஸ் ஐயர், ரபாடா, டேவிட் வார்னர் ஆகியோரின் பெயர் தான் ஏலத்தில் முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர்களது அடிப்படை விலை 2 கோடியாகும்.
பேட்ஸ்மேன்கள் பட்டியல் மெகா ஏலத்தில் 2வது பட்டியலில் பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் மேற்கிந்திய தீவுகள் ஷிம்ரன் ஹேட்மர் அவர் அடிப்படை விலையை ஒன்றரை கோடியாக நிர்ணயித்துள்ளார். தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தனது அடிப்படை விலையை 1 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார்., படிக்கல், 2 கோடி ரூபாயாகவும், மணிஷ் பாண்டே ஒரு கோடி ரூபாயாகவும் , ராபின் உத்தப்பா,சுரேஷ் ரெய்னா, ஜேசன் ராய் , ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் தங்களது அடிப்படை விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.
ஆல் ரவுண்டர்கள் மெகா ஏலத்தில் 3வது பட்டியல் ஆல் ரவுண்டர்கள் இடம்பெற்றுள்ளனர்,இதில் ஷகிபுல் ஹசன், சி.எஸ்.கே. வீரர் பிராவோ தங்களது அடிப்படை விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளனர். இதில் இலங்கை வீரர் ஹசரங்கா ஒரு கோடி ரூபாயாகவும், மேற்கிந்திய தீவுகள் ஆல் ரவுண்டர் ஹோல்டர் தனது அடிப்படை விலையை ஒன்றரை கோடி ரூபாயாகவும் நிர்ணயித்துள்ளனர்.குர்னல் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், ஹர்சல் பட்டேல் தங்களது விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளனர். நித்திஷ் ரானா தனது விலையை1 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார்.
எத்தனை வீரர்கள் இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர்கள் 47 பேரும், மேற்கிந்திய திவுகள் வீரர் 34 பேரும், தென்னாப்பிரிக்க வீரர்கள் 33 பேரும், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து தலா 24 வீரர்களும், இலங்கையிலிருந்து 23 வீரர்களும், ஆப்கானிஸ்தானிலிருந்து 17 வீரர்களும், வங்கதேசத்திலிருந்து 5 வீரர்களும் நேபாள், ஜிம்பாப்வே, அமெரிக்காவிலிருந்து தலா ஒரு வீரரும் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.