web log free
April 26, 2024

M.W. ராஜசிங்கம் சவால் கிண்ணத்தை வென்றது பவதாரணியின் சோல்வ் xi அணி!

M.W. ராஜசிங்கம் சவால் கிண்ண கிரிக்கெட் போட்டியில் Solve Xi அணி NCC அகாடமி அணியை தோற்கடித்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 

M.W. ராஜசிங்கம் சவால் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த பெப்ரவரி 6ம் திகதி அன்று NCC மைதானத்தில் 50 ஓவர்கள் போட்டியாக இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சோல்வ் Xi அணி 48.3 ஓவர்களில் 217 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இந்த அணியைச் சேர்ந்த செல்வராஜன் ருஷாந்தன் மற்றும் மகாதேவன், கோபியன் ஆகியோரின் பெறுமதியான ஓட்டங்களை குவித்து அணிக்கு வலுசேர்த்தனர். 

இந்த சவாலான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய NCC அணி ஒரு கட்டத்தில் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது, ஆனால் ஹன்சஜா குணசேகர மற்றும் அஷான் ஹப்புஆராச்சி ஜோடி இணைந்து பொறுப்பை ஏற்று ஐந்தாவது விக்கெட்டுக்கு 129 ஓட்டங்களை குவித்தது.

ஹன்சஜாவின் ஆட்டமிழப்புடன் பின்னடைவை சந்தித்த NCC அணி அதன் தலைவர் விமுக்தி பண்டார மற்றும் ஷமல்க ஹேஷான், நுவான் ஜயரத்ன மற்றும் நிமேந்திரா ஆகியோர் சிறப்பாக விளையாடிய போதும் இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியில் NCC அணி 209 ஓட்டங்கள் பெற்று தோல்வியடைந்தது. 

சோல்வ் பவுண்டேஷனின் தலைவி பவதாரணி ராஜசிங்கம் வடக்கிலிருந்து இந்த அணியை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டியதுடன் தனது கணவர் தீபன் ராஜசிங்கத்துடன் இணைந்து திறமையான யாழ். இளைஞர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவித்தார். 

NCCயின் வாரியம் மற்றும் அதிகாரிகளுக்கும் குறிப்பாக அசோக டி சில்வா, லலித், திலக் மற்றும் பிரான்கி ஆகியோருக்கு வடக்கிலிருந்து சோல்வ் Xi க்கு எதிராக கொழும்பில் விளையாடுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார்.

போட்டி நிலவரம் வருமாறு, 

சோல்வ் Xi அணி - 48.3 ஓவர்களில் 217 /10

ஜெலாம் கோபியன் 47,

ஜெயக்குமார் சஞ்சீவன் 48,

அந்தோணி அருண்பிரகாஷ் 45,

செல்வராஜன் ருஷாந்தன் 11,

மகாதேவன் கோபியன் 15 நாட் அவுட்,

பந்து வீச்சில் NCC சார்பில்

சசிந்து கவிதிலக 2/17,

அஷான் 7/39,

நுவின் 7/39

விமுக்தி பண்டார 3/28)

NCC அகாடமி - 50 ஓவர்களில் 209/9

ஹன்சஜா குணசேகர 69,

அஷான் ஹப்புஆராச்சி 44,

விமுக்தி பண்டார 19,

ஷமல்க ஹேஷான் 14,

நுவான் ஜெயரத்ன 10,

நிமேந்திரா 12

பந்துவீச்சில் சோல்வ் Xi அணி சார்பில்

நிரியநாதன் நிருக்ஷன் 2/38,

பிரதீப் 2/34)