இந்தியன் பிரிமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற 19ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியை எதிர்க்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி 40 ஓட்டங்களால் பெற்றி பெற்றது.
போட்டியில் நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
அதனையடுத்து, முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை பெற்றது.
137 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 17.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
முன்னதாக, இடம்பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லென் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 22 ஓட்டங்களினால் வெற்றிப்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய கிங்ஸ் லென் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.