இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் இருந்து வருகிறார். அதோடு அவரது கேப்டன்சியில் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்கிற காரணத்தினால் மூன்று வகையான கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பதவியில் இருந்து அவர் வெளியேறி உள்ளார்.
இந்நிலையில் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடி வந்தாலும் இன்னும் அவரது 71-வது சதத்தை அடிக்காமல் தாமதித்து வருகிறார். இதன் காரணமாக அவரின் பேட்டிங் பார்ம் மீது இன்னும் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
மேலும் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரிலும் அவரது பேட்டிங் சுமாராகவே இருந்ததனால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அவர் பின்தங்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் விராட் கோலி டெல்லி அணிக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாட போகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் கடந்த ஆண்டு வரை கேப்டனாக செயல்பட்ட அவர் பணிச்சுமை காரணமாக அந்த கேப்டன் பதவியில் இருந்து வெளியேறி தற்போது முழு நேர பேட்ஸ்மேனாக விளையாட இருக்கிறார்.
பின்னர் இந்த ஐபிஎல் தொடர் முடிந்து இந்தியா வரும் தென் ஆப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த தொடரில் இருந்து வெளியேறும் விராட் கோலி டெல்லி அணிக்காக இரண்டாம் பாதி ரஞ்சி டிராபியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகின்றன. இதற்கு பின்னர் பிசிசிஐ தலைவர் கங்குலி கொடுக்கும் அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் ரன் குவிக்க தடுமாறிய வேளையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் அவர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடி தங்களை நிரூபித்தால் நிச்சயம் மீண்டும் தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்று பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் ரஞ்சி போட்டிகளில் விளையாடினர்.
அதே வகையில் தற்போது கோலியின் மீதும் அழுத்தம் அதிகரித்து உள்ளது, இதன் காரணமாகவே தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட யோசித்திருக்கிறார். இதையும் படிங்க : நான் ஸ்கூல் படிக்கும்போதே அப்படித்தான் – கெத்தான பள்ளி வாழ்க்கை கதையை பகிர்ந்த கெளதம் கம்பீர் ரஞ்சி கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோலி மீண்டும் பழைய பார்ம்முடன் திரும்ப வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இருப்பினும் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் தென்னாபிரிக்க தொடருக்கான அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.