ஐபிஎல் தொடரின் 23ஆவது போட்டி நேற்று சென்னையில் கொல்கத்தா அணிக்கும் சிஎஸ்கே வுக்கும் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்தப்பில் ஈடுபட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 108 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக தீபக் சாகர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
109 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் வாட்சனும் டூப்ளஸிஸும் களமிறங்கினார்கள்.
இறுதியில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
3 விக்கெட் வீழ்த்திய தீபக் சாகருக்கு சிறப்பாட்டக்காரர் விருது வழங்கப்பட்டது. இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.