web log free
December 27, 2024

பெங்களூரு அணி வெற்றி

 

மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற இந்திய பிரிமியர் லீக் போட்டியில் பெங்களூரு அணி 19.2 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதையடுத்து, பஞ்சாப் அணி களமிறங்கியதுடன், 4 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 19.2 ஓவரில் இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd