இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதனையடுத்த, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்பு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ், 19 ஓவர்களில் 5 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதேவேளை, புள்ளிப்பட்டியலில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளதுடன், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் இரண்டாம் மற்றும் 3ம் இடங்களில் உள்ளன.
கொல்கட்டா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் தலா 8 புள்ளிகளைப் பெற்று நான்காம் மற்றும் 5ம் இடங்களில் உள்ளன.
சன்ரைசர்ஸ் ஹைதாராபாத், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் இறுதி மூன்று இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.