சாம்பியன்ஸ் லீக் காற்பந்து: இன்றிரவு அரையிறுதி
சாம்பியன்ஸ் லீக் காற்பந்துக் கிண்ணத்தின் முதல் சுற்று அரையிறுதி ஆட்டம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவிருக்கிறது.
முதல் சுற்று அரையிறுதி ஆட்டம்:
டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (Tottenham Hotspur) - அயேக்ஸ் (Ajax)
சிங்கப்பூர் நேரப்படி நாளை அதிகாலை 3 மணிக்கு
பார்சலோனா(Barcelona) - லிவர்ப்பூல் (Liverpool)
சிங்கப்பூர் நேரப்படி நாளை மறுநாள் அதிகாலை 3 மணிக்கு
இரண்டாம் சுற்று அரையிறுதி ஆட்டங்கள் மே 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
அண்மைய ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிவரும் அயேக்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கிண்ணத்தை வெல்ல இந்த ஆண்டு பார்சலோனா அணிக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.
அரையிறுதி ஆட்டங்களில் வெற்றிபெறும் அணிகள் ஜுன் 2ஆம் திகதி இறுதி ஆட்டத்தில் மோதும்.