கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு போர்ச்சுகல் தகுதி பெற்றுள்ளது.
இதையடுத்து பிரேசில், பிரான்ஸ், போர்ச்சுகல் ஆகிய மூன்று அணிகளும் இரு ஆட்டங்களிலேயே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் உருகுவே அணியை 2-0 என வீழ்த்தியது போர்ச்சுகல். முதல் ஆட்டத்தில் கானாவை 3-2 என வீழ்த்தியது போர்ச்சுகல். டிசம்பர் 2 அன்று தனது கடைசி ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொள்கிறது.
பிரேசில் அணி, ஸ்விட்சர்லாந்தை 1-0 எனவும் செர்பியாவை 2-0 எனவும் வீழ்த்தியது. அதேபோல நடப்பு உலக சாம்பியன் பிரான்ஸ் அணி, டென்மார்க்கை 2-1 எனவும் ஆஸ்திரேலியாவை 4-1 எனவும் வீழ்த்தியது.