Homeஉள்நாட்டு செய்திதுப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியை பாதுகாக்குமாறு கோரிக்கை

துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியை பாதுகாக்குமாறு கோரிக்கை

spot_img

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியை பாதுகாக்குமாறு, ஏனைய சிறைச்சாலை அதிகாரிகள் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்கள் இன்று காலை (08) ஊர்வலமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அங்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பில், சிறைச்சாலை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.

அதில் அந்த அதிகாரியின் நடவடிக்கையால்தான் வன்முறை நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், மிகப்பெரிய பேரழிவும் தடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அந்த அதிகாரியின் செயலால் நாங்கள் மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டோம். நாங்கள் ஒரே அணியாக இந்த சீருடையை அணிகிறோம். அவரைப் பற்றி ஏன் தவறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன?” என்று அமைச்சரிடம் கூறினர்.

மேலும், அந்த கலவரத்தின் போது கைதிகள் சிறையிலிருந்து தப்பியிருந்தால், அது பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும்.

அந்த அதிகாரியை “வீரர்” எனக் குறிப்பிட்டதுடன் அவர் மீது சுமத்தப்படும் நியாயமற்ற குற்றச்சாட்டுகளிலிருந்து அவரைப் பாதுகாக்குமாறும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, நீதியான முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதேவேளை இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

spot_img

Latest articles

கடும் வெப்பம்: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்

தற்போது நிலவும் கடுமையான வெப்பமான காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நியாயமானது – சுகாதார பிரதி அமைச்சர்

இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது விஞ்ஞானபூர்வமானதும் தர்க்கரீதியானதுமான நடவடிக்கை...

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்கள், லொறிகள், வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் இரும்பு ஆகியவற்றுக்கு...

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

More like this