Homeஉள்நாட்டு செய்திநிலுவைத் தொகை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்

நிலுவைத் தொகை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்

spot_img

அடுத்த வாரம் முதல் குடிநீர் கட்டணங்களில் நிலுவையில் உள்ள தொகைகளை வசூலிக்கும் சிறப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, 2026 ஜூலை 13 முதல் ஜூலை 19 வரை “குடிநீர் இணைப்பு துண்டிப்பு வாரம்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நடவடிக்கை முக்கியமாக சில பகுதிகளை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படவுள்ள பகுதிகள்:

  • கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரை உள்ள அனைத்து பகுதிகளும்
  • மகரகம பிராந்தியம்
  • கோட்டை (ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை) பிராந்தியம்

எனவே, தங்களின் குடிநீர் சேவை இடையூறு இன்றி தொடர வேண்டுமெனில், 2026 ஜூலை 13ஆம் திகதிக்கு முன் நிலுவையில் உள்ள அனைத்து கட்டணங்களையும் செலுத்தி முடிக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நுகர்வோரிடம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட திகதிக்கு முன்பாக நிலுவைத் தொகையை செலுத்துவதன் மூலம் தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்க முடியும் என்றும் சபை தெரிவித்துள்ளது.

spot_img

Latest articles

கடும் வெப்பம்: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்

தற்போது நிலவும் கடுமையான வெப்பமான காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நியாயமானது – சுகாதார பிரதி அமைச்சர்

இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது விஞ்ஞானபூர்வமானதும் தர்க்கரீதியானதுமான நடவடிக்கை...

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்கள், லொறிகள், வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் இரும்பு ஆகியவற்றுக்கு...

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

More like this