நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை அரசு மற்றும் எதிர்க்கட்சி அலட்சியமாக எடுத்துக்கொள்ளவில்லை என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார்.
“ஒரு தேநீர் கடையைக் கூட நடத்தவில்லை” என்று குற்றம்சாட்டப்பட்ட தலைவர், இரண்டு ஆண்டுகளுக்குள் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டு முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
எனவே, “ஒரு சிறைச்சாலையைக் கூட நிர்வகிக்க முடியாத அரசு நாட்டை எவ்வாறு நிர்வகிக்கும்?” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி பொருத்தமற்றது எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்தச் சம்பவத்திற்கான பொறுப்பை அரசு ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதனை குறுகிய அரசியல் இலாபத்திற்காக எதிர்க்கட்சி பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது என்றும் நிலந்தி கொட்டஹச்சி பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.




