Homeஉள்நாட்டு செய்திவிவசாயியை ‘தெய்வம்’ என்றவர்கள் இன்று கள்ளச்சாராயக்காரர்கள் என அவமதிக்கிறார்கள் – சஜித்

விவசாயியை ‘தெய்வம்’ என்றவர்கள் இன்று கள்ளச்சாராயக்காரர்கள் என அவமதிக்கிறார்கள் – சஜித்

spot_img

விவசாயியே தெய்வம் என்றும், விவசாயிகளை நாட்டின் ஆட்சியாளர்களாக உயர்த்துவோம் என்றும் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, இன்று விவசாயிகளை அவமதித்து, அவர்கள் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் என முத்திரை குத்தி இழிவுபடுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை நம்பிக்கையிழந்த நிலைக்கு தள்ளிய அரசு, தற்போது அவர்களை “செயற்கை விவசாயிகள்” என்றும், நாட்டிற்கு உணவு வழங்குபவர்கள் அல்ல என்றும் அவதூறாக சித்தரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளை ஆட்சியாளர்களாக மாற்றுவோம் என்று கூறியவர்கள், இன்று அவர்களின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு இழிவுபடுத்தும் நிலைக்கு தாழ்ந்துவிட்டதாகவும், விவசாயிகளின் தோளில் ஏறி ஆட்சிக்கு வந்த அரசே தற்போது அவர்களை அவமதித்து வருவதாகவும் சஜித் பிரேமதாச கூறினார்.

அரசின் கணக்குப்படி ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய ரூ.137 செலவாகும் நிலையில், தற்போது ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.120 என்ற நிர்ணய விலையே வழங்கப்படுகிறது.

இதனால், இந்த அரசுக்கு இலட்சக்கணக்கான வாக்குகளை வழங்கிய விவசாயிகள் ஒவ்வொரு கிலோ நெல்லுக்கும் ரூ.17 இழப்பைச் சந்திக்க வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

spot_img

Latest articles

கடும் வெப்பம்: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்

தற்போது நிலவும் கடுமையான வெப்பமான காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நியாயமானது – சுகாதார பிரதி அமைச்சர்

இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது விஞ்ஞானபூர்வமானதும் தர்க்கரீதியானதுமான நடவடிக்கை...

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்கள், லொறிகள், வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் இரும்பு ஆகியவற்றுக்கு...

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

More like this