Homeஉள்நாட்டு செய்திசர்வதேச அங்கீகாரம் பெற்ற டெங்கு தடுப்பூசி இலங்கையில்

சர்வதேச அங்கீகாரம் பெற்ற டெங்கு தடுப்பூசி இலங்கையில்

spot_img

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசியை பயன்படுத்துவதன் மூலம் இலங்கையில் டெங்கு நோய் பரவலை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடியும் என நீர்கொழும்பு டெங்கு மற்றும் டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் மருத்துவ மேலாண்மை மையத்தின் நிறுவனர் மற்றும் மருத்துவத் தலைவர், லக்குமார் பெனாண்டோ தெரிவித்தார்.

குறிப்பாக, டெங்கு வைரஸின் இரண்டாவது வகையான DENV-2-க்கு எதிராக இந்த தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் அதிகமான செயல்திறனை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.

இந்த தடுப்பூசியை உருவாக்கிய ஆராய்ச்சி பணிகளிலும் தாம் பங்கேற்றிருந்ததால், அது இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுவதை எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது சுமார் 41 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த சர்வதேச அங்கீகாரம் பெற்ற டெங்கு தடுப்பூசியை இலங்கையில் அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவர் லக்குமார் பெர்னாண்டோ இந்தக் கருத்தை வெளியிட்டார்.

மேலும், அறிவியல் ரீதியாக பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்ட வோல்பாக்கியா (Wolbachia) கொசு கட்டுப்பாட்டு முறையையும் இலங்கையில் அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

“தடுப்பூசி மட்டுமே டெங்கு நோயை முழுமையாக ஒழிக்க முடியாது. அது ஒரே தீர்வும் அல்ல. ஆனால் டெங்கு நோயால் ஏற்படும் பாதிப்புகளையும் சிக்கல்களையும் பெருமளவில் குறைக்க உதவும் மிகவும் பயனுள்ள வழிமுறையாக இது அமையும்,” என்று மருத்துவர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார்.

spot_img

Latest articles

கடும் வெப்பம்: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்

தற்போது நிலவும் கடுமையான வெப்பமான காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நியாயமானது – சுகாதார பிரதி அமைச்சர்

இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது விஞ்ஞானபூர்வமானதும் தர்க்கரீதியானதுமான நடவடிக்கை...

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்கள், லொறிகள், வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் இரும்பு ஆகியவற்றுக்கு...

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

More like this