முறையான வருமான ஆதாரமின்றி, திடீரென ஆடம்பர வாழ்க்கை வாழும் நபர்கள் மற்றும் சொத்துக் குவிப்பில் ஈடுபடுவோர் குறித்து தகவல் வழங்குமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுபோன்ற நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) ஏனைய பாதுகாப்புப் பிரிவினரும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணத்தைக் கண்டறியவே நாடளாவிய ரீதியில் இந்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நாட்டின் நல்வாழ்வைப் பாதுகாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள காவல்துறை, சந்தேகத்திற்குரிய நபர்கள் பற்றிய தகவல்களை உடனடியாகத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தகவல் தருபவர்களின் விபரங்கள் இரகசியமாகப் பேணப்படும்.




