இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் வெளியீட்டுத் திகதியைக் குறிப்பிட்டு புதிய போஸ்டரையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முதலில், இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் திகதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஜூலை 9ஆம் திகதி, திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு ‘A’ சான்றிதழை வழங்கியது.
இதையடுத்து, அனைத்து தாமதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து ‘ஜனநாயகன்’ திரைப்படம் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



