Homeசினிமா செய்திஇந்திய கிரிக்கெட் அணி உதவி பயிற்சியாளர் பதவி விலகல்

இந்திய கிரிக்கெட் அணி உதவி பயிற்சியாளர் பதவி விலகல்

spot_img

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்த நெதர்லாந்து அணியின் முன்னாள் சகல துறை ஆட்டக்காரரான ரயன் டென் டோஷ்கேட் தனது பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார். இந்த அறிவிப்பு இந்தியக் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது பதவியை இராஜிநாமா செய்ததற்கான உத்தியோகபூர்வ காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதேவேளை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் குழுவில் டென் டோஷ்கேட் மிக முக்கியமான உறுப்பினராக இருந்து வந்தார். இவரது விலகலைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் விரைவில் மேலும் பல மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், 2024-ல் கம்பீர் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றபோது இணைந்த டென் டோஷ்கேட் தற்போது விலகியுள்ளதால், அவரது இடத்தை அடுத்து யார் நிரப்பப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையேயும் கிரிக்கெட் விமர்சகர்களிடையேயும் அதிகரித்துள்ளது.

spot_img

Latest articles

இரத்மலானை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

இரத்மலானை கந்தவல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில்...

மஹர சிறைச்சாலையில் பதற்றம்!

மஹர சிறைச்சாலையில் இன்று (ஆகஸ்ட் 1) கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் காரணமாக பதற்றநிலை ஏற்பட்டது. இந்தச்...

நீர்கொழும்பு கடலில் படகு விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

– மீனவர்களை மீட்க முப்படை கூட்டு நடவடிக்கை நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில்...

கொழும்பு கடலில் விழுந்த 17 கொள்கலன்கள்

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே 17 நௌட்டிக்கல் மைல் தொலைவில் பயணித்த வணிகக் கப்பலிலிருந்து 17 காலியான சரக்குக் கொள்கலன்கள்...

More like this

ஜெயம் ரவியின் - ஆர்த்தி விவாகரத்து! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும்...

மணிரத்னம் – விஜய் சேதுபதி கூட்டணி புதிய திரைப்படம்

-கொல்கத்தாவில் விறுவிறுப்பாகத் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பு! ​தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்னம் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி...

தமிழ் சினிமா அருங்காட்சியகம்: காலத்தின் தேவை

உலகள​வில் சினிமா பொழுது​போக்கு ஊடக​மாக மட்​டுமே சுருங்​கும்​போது, தமிழ்​நாட்​டிலோ அது கலை, பண்​பாடு, அரசி​யலுடன் பிரிக்க முடி​யாத​படி பிணைந்​துள்​ளது....