Homeஉள்நாட்டு செய்திஅரசாங்கத்தின் திட்டத்துக்கு NPP தலைமைத்துவ சபை உறுப்பினர் எதிர்ப்பு

அரசாங்கத்தின் திட்டத்துக்கு NPP தலைமைத்துவ சபை உறுப்பினர் எதிர்ப்பு

spot_img

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைமைத்துவ சபை மற்றும் செயற்குழு உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் முன்மொழிவுக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்திற்கு, தான் உறுப்பினராக இருக்கும் இந்த கட்சியின் முடிவெடுக்கும் அமைப்புகள் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய விஜேநாயக்க, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இயக்கத்தின் தலைமையிலான அரசாங்கத்துடன் தொடர்புடைய இந்த முன்மொழிவை ஏன் எதிர்க்கிறார் என்றும் விளக்கினார்.

“நான் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ சபை மற்றும் செயற்குழுவின் உறுப்பினர். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது போன்ற எந்தவொரு முடிவும், நான் அங்கத்துவமாக இருக்கும் எந்தவொரு செயற்குழுவிலோ அல்லது வேறு எந்த சபையிலோ எடுக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து தான் கேள்வி எழுப்பிய போது, தன்னை அமைதியாக இருக்குமாறு கூறினர் என்றும் விஜேநாயக்க குற்றம் சாட்டினார்.

“இது குறித்து நான் கேட்டபோது, எனது வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு எனக்குச் சொல்லப்பட்டது,” என்றார்.

சட்டத்துறையிலும் இடதுசாரி அரசியலிலும் தனக்குள்ள நீண்டகால ஈடுபாட்டை சுட்டிக்காட்டிய விஜேநாயக்க, தான் 55 வருடங்கள் சட்டத்தரணியாக பணியாற்றியுள்ளதாகவும், சுமார் 60 வருடங்களாக இடதுசாரி இயக்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

தனது அரசியல் வாழ்க்கை கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், ஒரு நாகரீகமான சமூகத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என்றும் கூறிய அவர், கடந்த காலங்களில் பல்வேறு அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்திலும் நீதித்துறையின் சுதந்திரத்திற்காக போராடியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய முன்மொழிவுக்கு தான் தெரிவிக்கும் எதிர்ப்பானது, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அந்த அர்ப்பணிப்பின் தொடர்ச்சியாகும் என்றும் விஜேநாயக்க கூறினார். “அதற்காக நான் இன்றும் தொடர்ந்து போராடுவேன். இது ஒரு தன்னிச்சையான மற்றும் நாகரீகமற்ற முடிவாகும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

Latest articles

12 கோடி விவகாரம், மூவர் பிணையில் விடுதலை

இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின்...

ஜெயம் ரவியின் - ஆர்த்தி விவாகரத்து! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும்...

சஜித் அணி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி பண்டாரவளை பேருந்து நிலையத்திற்கு அருகில் பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது, ஐக்கிய...

இலங்கைக்கு எரிபொருள் நெருக்கடி எச்சரிக்கை!

-மத்திய கிழக்குப் பதற்றம்: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரிய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான...

More like this