2019 ஆம் ஆண்டு பெப்ரவரி பண்டாரவளை பேருந்து நிலையத்திற்கு அருகில் பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி உள்ளிட்ட சிலர் பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தி சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் ஜீப் வண்டிகளில் பயணித்துக் கொண்டிருந்த போது, பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று அவர்களை முந்திச் சென்றமை தொடர்பிலேயே இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.
தங்களை முந்திச் சென்ற பொலிஸ் ஜீப் வண்டியை மறித்த பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர், அங்கிருந்த அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து, தாக்குதல் நடத்தி காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
சமிந்த விஜேசிறி மற்றும் அவரது சாரதியான பந்துல ரத்நாயக்க ஆகியோர் 4 குற்றச்சாட்டுகளுக்கும், அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் அதிகாரியான ரசிக கருணாதிலக்க 3 குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளிகளாக பதுளை மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.




