ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரிய குறித்து அண்மையில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைக்காக, வாக்குமூலம் அளிக்கும் பொருட்டு அவர் இன்று மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திற்கு வருகை தந்தார்.
அங்கு அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மத்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தகவல்கள் தெரிவிக்கின்றன.




