Homeஉலக செய்திகனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி

spot_img

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்கள், லொறிகள், வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் இரும்பு ஆகியவற்றுக்கு 50 சதவீதம் அதிக வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வரி விதிப்பு 2027 ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

எனினும், குறித்த பொருட்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்பட்டால் அவற்றுக்கு எந்தவித இறக்குமதி வரியும் விதிக்கப்படாது எனவும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தக நடவடிக்கைகளில் கனடா மிகவும் அநியாயமான முறையில் செயற்படுவதாக குற்றம்சாட்டிய ட்ரம்ப், அமெரிக்காவுக்கு கனடா தேவையில்லை என்ற போதிலும், கனடாவின் இருப்புக்கு அமெரிக்கா அத்தியாவசியமானது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

புதிய மெட்ரோ பேருந்துகளுக்கு திட்டமிட்டு சேதம் விளைவிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை

புதிய மெட்ரோ (Metro) பேருந்துகளுக்கு திட்டமிட்டு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார்...

சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சு வெளியிடுவோர் தொடர்பில் விசாரணை

– அமைச்சர் ஆனந்த விஜேபால சமூக ஊடகங்கள் ஊடாக வெறுப்புப் பேச்சுகளை வெளியிடும் நபர்கள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப்...

NPP எம்பிக்கள் குழுவில் காவி உடையைத் துறந்த 50க்கும் மேற்பட்டோர் உள்ளனர்!

– உலபனே சுமங்கல தேரர் காவி உடையைப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் தேசிய மக்கள் சக்தியின்...

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் நாட்டுக்கு ரூ.17,965 மில்லியனுக்கும் அதிக இழப்பு

தரமற்ற நிலக்கரியை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை மற்றும் அவசர கொள்வனவுகள் காரணமாக நாட்டுக்கு 17,965 மில்லியன் ரூபாய்க்கும் (1,796.5...

More like this

ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் கப்பல் விபத்து

இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த...

நேபாளத்தில் பதறவைக்கும் களம்! உயிரிழப்பு 160 ஆக உயர்வு

படத்தில் நீங்கள் பார்க்கும் அழகான பக்லிங் (Bhakling) கிராமம், திபெத் எல்லைக்கு அருகே நேபாளத்தின் 'ரசுவா' (Rasuwa) மாவட்டத்தில்...

டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய திட்டம்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டில் இஸ்ரேலிடமிருந்து அமெரிக்காவிற்குப் பல...