– பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர
தற்போதைய ஜனாதிபதி அநுர திசாநாயக்க அவர்கள் உன்னதமான புத்திசாலித்தனமான தலைவர் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அண்மையில் தொழிற்சங்கம் ஒன்றுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி வெளியிட்ட “அபாயம்” தொடர்பான கருத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் மேற்கொண்டிருந்த பகுப்பாய்வின் மூலம், அந்த உன்னத தலைவரின் புத்திசாலித்தனத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான ஆழமான அறிவுடனும் புரிதலுடனும் கருத்துக்களை வெளியிடும் ஒரு தலைவரை இதற்கு முன்னர் தாம் பார்த்ததில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய புத்திசாலித்தனமான தலைமைத்துவம் நாட்டுக்குக் கிடைத்திருப்பது தொடர்பில் ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியடைய வேண்டும் என தெரிவித்த பிரதி அமைச்சர், ஜனாதிபதியின் இந்த அறிவார்ந்த தலைமைத்துவம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரும் பலமாக அமையும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.
மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றியபோதே பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.




