Homeஉள்நாட்டு செய்திவறட்சியால் 2027ஆம் ஆண்டில் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்படும்

வறட்சியால் 2027ஆம் ஆண்டில் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்படும்

spot_img

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் தாக்கம் தேங்காய் விளைச்சலில் பிரதானமாக 2027ஆம் ஆண்டிலேயே வெளிப்படும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அஜித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேங்காய் விளைச்சலில் ஓரளவு குறைவு ஏற்படும். எனினும், இம்முறை நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வறட்சியான காலநிலை காரணமாக தேங்காய் பூக்கள் பூப்பது குறைவடைதல், பூக்கள் காய்ந்து போதல் மற்றும் தேங்காய்கள் உதிர்தல் போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும். இதன் விளைவாக அடுத்த ஆண்டு தேங்காய் விளைச்சல் குறையக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, வறட்சியைத் தாங்கக்கூடிய வகையில் தேங்காய் தோட்டங்களில் நீரைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய நீர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் காலங்களில் புதிய தேங்காய் பயிர்ச்செய்கைகளை ஆரம்பிப்பதற்கு விவசாயிகளை ஊக்குவிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பேராசிரியர் அஜித் ஜயவீர தெரிவித்துள்ளார். நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக புதிதாக பயிரிடப்படும் தேங்காய் மரங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், 2026ஆம் ஆண்டில் சுமார் 3,018 மில்லியன் தேங்காய்கள் வருடாந்த உற்பத்தியாகக் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது 2025ஆம் ஆண்டில் கிடைத்த 2,800 மில்லியன் தேங்காய் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் சுமார் 11 சதவீத அதிகரிப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

மன்னார் முதல் பாணந்துறை வரையிலான கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள்!

மன்னார் பள்ளத்தாக்கிலிருந்து பாணந்துறை வரையிலான கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் மிக உயர்தரமான இரண்டு...

SJB எடுத்துள்ள முக்கிய முடிவு

சமகி ஜன பலவேகய (SJB) தலைமையிலான எதிர்க்கட்சி, “ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி”யின் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருக்க முடிவு செய்துள்ளதாகத்...

பெட்ரோல் விலைகள் குறைப்பு – இன்று நள்ளிரவு முதல் அமுல்

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் 92 மற்றும் பெட்ரோல் 95 விலைகளைக் குறைக்க...

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள பழைய நாடாளுமன்றக் கட்டடத்...

More like this