Homeஉள்நாட்டு செய்திதனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

spot_img

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் மாதாந்த ரயில் பருவகால பயணச்சீட்டுகளை இணையம் மூலம் பெற்றுக்கொள்ளும்வசதி வழங்கப்படவுள்ளது.

இதற்காக seatreservation.railway.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும் எனபோக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்திஅமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, தினசரி பயணங்களுக்கு ரயிலைப் பயன்படுத்தும் தனியார் துறை ஊழியர்கள், ரயில் ஆன்லைன் முன்பதிவு தளத்தின் மூலம் மாதாந்த பருவகால பயணச்சீட்டுக்குவிண்ணப்பித்து அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதுவரை அரச துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த வசதி, தற்போது ரயிலைப் பயன்படுத்தும் தனியார் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

பழைய முறையில்

மாதாந்த பருவகால பயணச்சீட்டை பெறுவதற்கு பயணிகள்:

  • விண்ணப்பப் படிவம்
  • புகைப்படம்
  • வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம்
  • தேசிய அடையாள அட்டையின் (NIC) நகல்

ஆகியவற்றை சமர்ப்பித்து ரயில் அடையாள அட்டையைப் பெற வேண்டியிருந்தது.

மேலும், இந்த சேவை குறிப்பிட்ட நேரங்களிலும் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட காலப்பகுதியிலும் மட்டுமேவழங்கப்பட்டு வந்தது.

புதிய ஆன்லைன் முறையில்

புதிய முறையின் கீழ், பயணிகள் தங்கள் அடையாளத்தையும் பயனர் கணக்கையும் சரிபார்த்த பின்னர், வீட்டிலிருந்தே முழு பருவகால பயணச்சீட்டு செயல்முறையையும் ஆன்லைனில் நிறைவு செய்ய முடியும்.

கணக்கு சரிபார்ப்பை, ஆசன முன்பதிவு வசதி கொண்ட ரயில் நிலையங்களில் மேற்கொள்ள முடியும்.

ரயில் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தத் திட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கை ரயில்வேதிணைக்களம் மற்றும் SLT-Mobitel ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

spot_img

Latest articles

துமிந்த திஸாநாயக்க மீது குற்றப்பத்திரிகை

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! கொழும்பு உயர்...

நிரந்தரமாக சிறைக்கு செல்லும் ஞானசார தேரர்!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என...

சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்களது சொந்த வீட்டைக் கட்டுவதற்கோ அல்லது வீடு ஒன்றை வாங்குவதற்கோ உதவும் வகையில் ‘எதெர...

NPP பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை

நாட்டின் டொலர் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படாது என சர்வஜன பலய கட்சியின் தலைவரும்நாடாளுமன்ற உறுப்பினருமான திலித்...

More like this