நாட்டின் டொலர் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படாது என சர்வஜன பலய கட்சியின் தலைவரும்நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்காக பேரணிகளை நடத்த வேண்டிய அவசியமில்லை எனவும், நாடாளுமன்றத்தில் பணியாற்றும் சுமார் 1,500 ஊழியர்களிடையே கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினாலே நாட்டின் மக்கள் கருத்தை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பேரணிகளுக்கு யாரை அழைத்து வந்தாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை எனவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நீண்டகால, நடுத்தரகால மற்றும் குறுகியகால திட்டங்கள் அவசியம்எனவும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாட்டின் குறைந்தளவிலான டொலர் வளத்தையும் செலவிட்டு, பேருந்துகள் மூலம் மக்களைஅழைத்து வந்து பேரணிகளை நடத்துவதாகவும், அதேவேளை மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பசியுடன் வாழ்ந்து வருவதாகவும்அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




