கலகொட அத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் வழங்கப்பட்ட அந்த பொதுமன்னிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம், குறித்த பொதுமன்னிப்பை செல்லுபடியற்றது என அறிவித்துள்ளது.




