பாடசாலைப் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நொச்சியாகமவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வரவு–செலவுத் திட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.




