நாடு முழுவதும் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக வீடுகள் சேதமடைந்து, தொடர்ந்து வாடகை வீடுகளில் வசித்து வரும் வீட்டு உரிமையாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்தம் ரூ.25,000 வீட்டு வாடகை கொடுப்பனவை 2026 டிசம்பர் மாதம் வரை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 2025.12.05 அன்று வெளியிடப்பட்ட 2025/08 ஆம் இலக்க வரவு-செலவுத் திட்ட சுற்றறிக்கையின் 04ஆம் உப இலக்கத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, இந்த கொடுப்பனவை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக வீடுகளை இழந்து, தங்குவதற்கு வேறு வீடு இல்லாத வீட்டு உரிமையாளர்களுக்கு இந்த மாதாந்த வாடகை கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
அவர்கள் புதிய வீடுகளை நிர்மாணித்து முடிக்கும் வரையில் தற்காலிகமாக வேறு இடங்களில் வசிப்பதற்கான உதவியாக இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.




