– ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜனாதிபதி
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக முன்வைக்கப்படும் அனுதாபக் கோரிக்கைகளுக்கு தான் செவிசாய்க்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“யார் பதற்றமடைந்தாலும் எனக்கு கண்ணீர் தெரிவதில்லை. அழுவது தெரிவதில்லை. எல்லோரும் ஒன்றுதான்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த நாட்டை நான் கட்டியெழுப்புவேன், கட்டியெழுப்பியே தீருவேன். குடும்பமாக சேர்ந்து நாட்டைச் சுரண்டியிருந்தால், அந்தக் குடும்பமே அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டும்” என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.




