Homeஉள்நாட்டு செய்திமழையுடனான வானிலை மேலும் தொடரும்

மழையுடனான வானிலை மேலும் தொடரும்

spot_img

மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு திசையை நோக்கி சற்று சாய்ந்தவாறு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இது இன்று இரவு இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளைக் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நேரடி தாக்கம் இலங்கைக்கு ஏற்படாது என்றாலும், அத்தாழ்வு மண்டலத்தை நோக்கி காற்றோட்டம் ஈர்க்கப்படுவதன் காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் மாகாணம், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40–50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

spot_img

Latest articles

உலக சந்தை விலை உயர்ந்தாலும் நுகர்வோர் மீது முழுச் சுமையையும் சுமத்தமாட்டோம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ள போதிலும், அதன் முழுச் சுமையையும் இலங்கை நுகர்வோர் மீது...

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ் – புதிய டிஜிட்டல் முறை

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குத் தேவையான மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான புதிய டிஜிட்டல் முறையொன்று இன்று (24) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக...

2026 உலக சிறுவர் தின தேசிய வாரம் செப்டம்பர் 25 முதல் ஆரம்பம்

இம்முறை உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 01 வரை “2026 உலக சிறுவர்...

அத்தியாவசிய மருந்துகளில் 33 வகைக்கு தட்டுப்பாடு

– உயிர்காக்கும் 13 மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இல்லை இலங்கையில் பயன்படுத்தப்படும் 618 அத்தியாவசிய மருந்து வகைகளில் 33 வகைகளுக்கு...

More like this