ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குத் தேவையான மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான புதிய டிஜிட்டல் முறையொன்று இன்று (24) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் கிளிஃபர்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த புதிய முறையின் கீழ், விண்ணப்பதாரர்கள் எந்தவொரு தொலைபேசி வலையமைப்பின் ஊடாகவும் மருத்துவப் பரிசோதனைக்கான நேரத்தை முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்ள முடியும்.
நேரம் ஒதுக்குவதற்கான சேவை இலவசமாக வழங்கப்படுவதுடன், அதற்காக விண்ணப்பதாரர்களிடம் எவ்வித கட்டணமும் அறவிடப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம் பெற எதிர்பார்ப்பவர்களுக்கு மருத்துவ சான்றிதழைப் பெறும் செயல்முறையை மேலும் திறமையானதாகவும் முறையானதாகவும் மாற்றுவதுடன், மருத்துவப் பரிசோதனைக்கான நேரத்தை எளிதாக ஒதுக்கிக்கொள்ளும் வசதியை ஏற்படுத்துவதுமே இந்த புதிய முறையை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கமாகும்.




