Homeஉள்நாட்டு செய்திஉலக சந்தை விலை உயர்ந்தாலும் நுகர்வோர் மீது முழுச் சுமையையும் சுமத்தமாட்டோம்

உலக சந்தை விலை உயர்ந்தாலும் நுகர்வோர் மீது முழுச் சுமையையும் சுமத்தமாட்டோம்

spot_img

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ள போதிலும், அதன் முழுச் சுமையையும் இலங்கை நுகர்வோர் மீது சுமத்த அரசாங்கம் தயாராக இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாத இறுதியிலும் மேற்கொள்ளப்படும் வழக்கமான எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பான தகவல்களை இன்றைய தினமே பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வரவுள்ள எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பாக மேலும் விளக்கமளித்த அமைச்சர், கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போலவே, இம்முறையும் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வினால் ஏற்படும் அழுத்தத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், முழுச் சுமையையும் நுகர்வோர் மீது சுமத்தாமல், அதன் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு மக்களுக்கு அதிகபட்ச நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

spot_img

Latest articles

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ் – புதிய டிஜிட்டல் முறை

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குத் தேவையான மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான புதிய டிஜிட்டல் முறையொன்று இன்று (24) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக...

2026 உலக சிறுவர் தின தேசிய வாரம் செப்டம்பர் 25 முதல் ஆரம்பம்

இம்முறை உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 01 வரை “2026 உலக சிறுவர்...

மழையுடனான வானிலை மேலும் தொடரும்

மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு...

அத்தியாவசிய மருந்துகளில் 33 வகைக்கு தட்டுப்பாடு

– உயிர்காக்கும் 13 மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இல்லை இலங்கையில் பயன்படுத்தப்படும் 618 அத்தியாவசிய மருந்து வகைகளில் 33 வகைகளுக்கு...

More like this